93வயதில் மனைவியுடன் நடைப்பயிற்சி செய்யும் கமல்ஹாசனின் அண்ணன்: மகள் பகிர்ந்த வீடியோ
கமல்ஹாசனின் அண்ணனான சாருஹாசன் மனைவியுடன் நடைப்பயிற்சி செய்யும் வீடியோ காட்சி தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
கமல்ஹாசனின் அண்ணன்
உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் நடிகர் சாருஹாசன் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்தவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து பல ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.
இவர் நடிப்பில் இறுதியாக தாதா87 என்றத் திரைப்படம் அதிகம் கவனம் ஈர்த்திருந்தது. மேலும், இவர் நடிகை சுஹாசினியின் தந்தையுமாவார்.
சாருஹாசன் புதிய சங்கமம், ஐபிசி 215 படங்களையும் இயக்கியிருக்கிறார். சினிமாவில் நடிகர், இயக்குனர் என பலமுகங்களைக் கொண்ட இவர் நிஜத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.
சுஹாசினி பகிர்ந்த வீடியோ
நடிகர் சாருஹாசனுக்கு தற்போது 93 வயதாகி விட்டது. இவரது மனைவி ராஜலட்சுமிக்கு 88 வயதாகிறது.
இந்நிலையில், இவர்கள் இருவரும் ஜோடியாக காலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்யும் வீடியோ காட்சியை நடிகை சுஹாசினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இன்று காலை 6 மணிக்கு. 93 மற்றும் 88 ராக்கிங்கில் எனப் பதிவிட்டிருக்கிறார்.
இந்த வீடியோ காட்சி தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.