சாப்பிட்ட பின்பு நடைபயிற்சி மேற்கொள்வது நல்லதா?
சாப்பிட்ட பின்பு நடைபயிற்சி மேற்கொள்ளலாமா என்பதையும், அவ்வாறு செய்தால் உடம்பிற்கு கெடுதல் ஏற்படுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சாப்பிட்ட பின்பு நடைபயிற்சி
பொதுவாக நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நேரம் காலம் கிடையாது என்றும் கிடைத்த நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம் என்று பலரும் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் சாப்பிட்ட பின்பு நடைபயிற்சி மேற்கொள்ளக்கூடாது என்று பலரும் கூறிவரும் நிலையில், அது உண்மையா என்பதை தெரிந்து கொள்வோம்.
Image Source : FREEPIK
தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது உடம்பிற்கு நல்லது என்றாலும் சாப்பிட்ட பின்பு நடைபயிற்சி மேற்கொள்வதால் எந்தவொரு பிரச்சனை இல்லையாம்.
அதாவது கூடுதல் கலோரிகளை எரிக்க சாப்பிட்ட பின்பு நடைபயிற்சி செல்வது நல்ல பலன் அளிக்கும் என்று கூறப்படுகின்றது.
ஆதலால் உணவு சாப்பிட்ட பின்பு நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது மட்டுமின்றி நாள் ஒன்றிற்கு குறைந்தது 100 அடிகள் கட்டாயம் நடக்க வேண்டுமாம்.
ஆயுர்வேத மருத்துவத்தில், அதிக நேரம் நடக்க முடியாவிட்டாலும், சாப்பிட்ட பின்பு செரிமான பிரச்சனையை தீர்ப்பதற்கு குறைந்தது 100 அடிகளாவது நடக்க வேண்டுமாம். இது செரிமானத்தை அதிகரிக்க உதவி செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சாப்பிட்ட பிறகு 100 அடிகள் நடப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவுகிறதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |