தேனீக்களை பற்றிய இந்த சுவாரசியமான உண்மைகள் தெரியுமா?
தேனீக்கள் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் சிலவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேன்
ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் தேனில் பல சத்துக்கள் உள்ளது. தேன் இதயத்தை பலப்படுத்தவும், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்கின்றது.
உடலில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதோடு இதயத்தின் தசைநார்களுக்கும் வலிமையைத் தருகிறது. இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் துணைபுரியும்.
ரத்தத்திலுள்ள வேண்டாத நச்சுத் தன்மையுள்ள பொருள்களை வெளியேற்றி ரத்தத்தைத் தூய்மைப்படுத்த தேன் உதவுகிறது.
இவ்வாறு பயன்களைத் தரும் தேனை நமக்கு கொடையாக கொடுக்கும் தேனீக்களைக் குறித்து சில சுவாரசியமான உண்மைகளை தெரிந்து கொள்வோம்.
சுவாரசியமான உண்மைகள்
தேனீக்கள் நடத்தைகள் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலில் அவற்றின் பங்கு மிக முக்கியமானது. நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகள், கொட்டைகளில் சுமார் 75 சதவீதம் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் காரணமாகின்றன.
தேனீக்கள் வாகல் நடனம் எனப்படும் ஒரு தனித்துவமான நடனத்தைப் பயன்படுத்துகின்றன.
வேலைக்கார தேனீக்கள் உணவு சேகரித்தல், பராமரித்தல், கூடு பராமரிப்பு போன்ற பல்வேறு பணிச்சுமைகளைச் செய்கின்றன. ஆண் தேனீக்களுக்கு இனச்சேர்க்கை செய்வது மட்டுமே வேலை.
தேனீக்கள் மனித முகங்களை அடையாளம் காண்கின்றது. வெவ்வோறு மனித முகங்களை வேறுபடுத்துவதற்கு காட்சி செயலாக்கத்திறனைப் பயன்படுத்துவது இதன் தனி திறமையாகும்.
ஒரு பவுண்டு தேனை உற்பத்தி செய்ய, தேனீக்கள் சுமார் 2 மில்லியன் பூக்களுக்கு செல்ல வேண்டும். அதாவது 55 ஆயிரம் மைல்களுக்கு மேல் பறக்க வேண்டுமாம். இதன் கூட்டு முயற்சியை இது வெளிப்படுத்துகின்றது.
தேனீக்கள் மணிக்கு 15 மைல் தூரம் செல்லும். மகரந்தச் சேர்க்கையாளர்களாக அவற்றின் செயல்திறனுக்கு பங்களிக்கின்றது.
பூச்சிக்கொல்லி பயன்பாடு, வாழ்விட இழப்பு, காலநிலை மாற்றம் போன்றவற்றால் தேனீ மக்கள் தொகை அளவில் உலகளவில் குறைந்து வருகின்றது. இந்த சரிவு உலக உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |