காலை எழுந்ததும் இதை மட்டும் பார்க்கக்கூடாதாம்... அசுப பலன்களை கொடுக்கும் ஜாக்கிரதை
நாம் காலையில் தூங்கி எழும் போது, செய்யும் சில தவறுகள் அந்த நாட்களில் சில பின்னடைவினை ஏற்படுத்தும் என்பது இந்து மதத்தின் ஒரு நம்பிக்கையாக இருக்கின்றது.
காலை எழுந்ததும் கால்களை பார்க்கக்கூடாது
இந்து மதத்தில் பல விதிகள் மட்டுமின்றி நம்பிக்கையும் உள்ளது. இந்த நம்பிக்கைகள் காலை எழுந்தது முதல் இரவு வரை நமது வேலைகளில் தொடர்புடையதாக இருக்கின்றது.
இதில் ஒன்று தான் இந்து மதத்தில், காலையில் எழுந்ததும் உங்கள் பாதங்களைப் பார்ப்பது அசுபமாகக் கருதப்படுகிறது. கிரகங்களால் நிர்ணயிக்கப்படும் ஜோதிடம் ஒரு நபரின் அனைத்து காரியங்களையும் நிர்வகிக்கின்றது.
இதில் பாதம் சம்பந்தமான எந்த நோய், வலி, அசௌகரியம் இருந்தாலும் அதன் ஆற்றல் சுக்கிர கிரகத்தால் ஆளப்படுகிறது.
இந்து சமயத்தின் படி, பேய் குருவான சுக்ராச்சாரியாரின் பாதங்களில் தங்குமிடமாக கருதப்படுகின்றது. எதிர்மறை ஆற்றலின் ஆதாரமாக காணப்படும் இவர், பேய்களின் ஆசிரியராக இருக்கின்றாராம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், காலையில் எழுந்தவுடனே உங்கள் பாதங்களைப் பார்ப்பதால், அந்த நபரில் எதிர்மறை எண்ணம் நிறைந்து, மனஅழுத்தம், பதட்டம், தனிமை, கெட்ட எண்ணங்கள் போன்றவற்றில் ஒருவர் காலை முதலே சிக்கித் தீமை பிறக்கும்.
மேலும் உங்களது பாதங்களை பார்ப்பதால் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரன் வலுவிழந்து போய்விடுமாம். இதனால் வெற்றி தடைபடுவதுடன், நிதி நெருக்கடியும் அதிகரிக்குமாம்.
இதனால் தான் காலை எழுந்தவுடனே கைகளை பார்க்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. கைகளில் மா லட்சுமியின் இருப்பிடம் சொல்லப்பட்டிருப்பதால் இவ்வாறான வழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவை ஐஸ்வர்யத்தை தரும்.
எனவே இந்த காரணத்திற்காக தான் காலையில் எழுந்து உங்கள் பாதங்களைப் பார்ப்பது இந்து மதத்தில் அசுபமாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |