இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்துவிட்டு படுத்தால் என்ன நடக்கும்!
பொதுவாகவே தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுவதாகவும், ஒரு நாளுக்கு இவ்வளவு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மை என்பதும் மருத்துவர்கள் கூறியிருப்பதை கேள்விப்பட்டிருப்போம்.
நம் உடலின் பெரும்பாலான பகுதி நீரால் நிரம்பியுள்ளது. ஆனால் தூங்கும் போதும் தூக்க செல்ல முன்னும் தண்ணீர் குடிக்கலாமா? கூடாதா என்ற கேள்வி இதுநாள் வரையில் யாரும் கேட்டிருக்க மாட்டார்கள் ஆனால் தூக்கத்திற்கு முன் தண்ணீர் குடிக்க கூடாதாம்.
இரவில் தண்ணீர் குடித்தால்
இரவு தூங்கும் முன் தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது தூக்க நேரத்தை முற்றிலும் பாதிக்கும். ஏனெனில் இரவெல்லாம் எழுந்து சிறுநீர் கழிக்க அடிக்கடி பாத்ரூருமிற்கும் படுக்கையறைக்கும் நடப்பதே விடிந்து விடும்.
இரவு நேரத்தில் நம்முடைய உடல் தானாகவே ஓய்வு எடுக்கும் நேரம். அப்போது உடல் நம்மை தொந்தரவு செய்யாது. சிலர் சிறுநீர் பையில் எஞ்சியிருக்கும் நீரைக் கூட வெளியேற்றுவிட்டுத் தூங்க வேண்டும் என்ற காரணத்திற்காக தூங்கும் முன் சிறுநீர் கழிப்பார்கள்.
அதற்கு ஏற்ப நிம்மதியான தூக்கத்திற்கு நம்மை 7 முதல் 8 மணி நேரம் வரை சிறுநீர் பையும் தொந்தரவு செய்யாது. ஆனால், நாம் அதிகமாக தண்ணீர் குடித்துவிட்டு இரவெல்லாம் நடந்துகொண்டே இருக்க நேரிடும்.
இப்படி இரவுத் தூக்கம் பாதிக்கப்பட்டால் உடலில் எந்த பழுது நீக்க வேலைகளும் நடக்காது. உடல் களைப்பு, பகலில் தூங்கி வழிதல், கண் எரிச்சல், கவனக்குறைவு , பசியின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எப்போது தண்ணீர் அருந்த வேண்டும்
இரவில் படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் திரவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும். தாகம் எடுத்தால் படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் அருந்த வேண்டும்.
அவ்வாறு குடிக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீரை தான் அருந்த வேண்டும். ஏனெனில் இது இரவில் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், உடலில் இருக்கும் கழிவுகளையும் வெளியேற்றும்.
மேலும், இதய நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மருத்தவ பரித்துரையின் படி தண்ணீர் அருந்த வேண்டும்.