மனசாட்சி இருந்தா பணத்தை திருப்பி கொடுங்க: திருநங்கை வெளியிட்ட காணொளியால் பரபரப்பு!
உறவுகள் காயப்படுத்தும் போது கூட வலிக்கவில்லை. ஆனால் காயப்படுத்திவிட்டு அதை நியாயப்படுத்தும் போது தான் வலிக்கிறது என குறிப்பிட்டு திருநங்கை வைஷுலிசா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாஞ்சில் விஜயன் - திருநங்கை வைஷுலிசா
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னிடம் பாலியல் ரீதியான தொடர்பைக் கொண்டிருந்தார், மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன்.
ஆனால் இப்போது நான் திருநங்கை என்பதால் என்னைத் தவிர்க்கிறார் என திருநங்கை வைஷுலிசா அண்மையில் புகார் கொடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு அல்ல.
இதனால் என்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த கருத்துக்களை பகிர்வதை நிறுத்துங்கள்.” என மனைவியுடன் சேர்ந்து காணொளியொன்றை வெளியிட்டார்.
இந்த காணொளிக்கு பதில் கொடுக்கும் வகையில் தற்போது, திருநங்கை வைஷுலிசா தன்னிடம் வாங்கிய பணத்தை மனசாட்சியிருந்தால் திருப்பி கொடுங்க என்று கேட்டுக்கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் மீண்டும் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |