திருமண நாளில் கணவருடன் பிரியங்கா செய்த வேலை! படு வைரலாகும் காணொளி
தொகுப்பாளினி பிரியங்கா தனது காதல் கணவருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று தங்களின் திருமண நாளில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
பிரியங்கா -வசி
சின்னத்திரையின் மூலம் நம் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.இவருக்கு அறிமுகம் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வந்த இவர், கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில், வசி சாச்சி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்தின் பின்னரும் தனது தொழிலில் அதே ஈடுப்பாட்டுடன் வெற்றிநடை போட்டு வரும் இவர் முன்னரை விட அதிக மகிழ்ச்சியாக ரசிகர்களுடன் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விடயங்களையும் பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில், நான் குழப்பத்தைக் கொண்டு வருகிறேன், அவர் அமைதியைக் கொண்டு வருகிறார்... நாங்கள் இருவரும் சேரும்போது, அது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. எங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்... என குறிப்பிட்டு திருமண நாளில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட காணொளி இணையத்தில் படு வைரைலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |