மாதவிடாய் தள்ளிப்போகிறதா? Mensovit Plus பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
பொதுவாக 28லிருந்து 35 நாட்களுக்குள் மாதம் ஒருமுறை பெண்களுக்கு ஏற்படும் சுழற்சியே மாதவிடாய், சிலநேரங்களில் மாதத்திற்கு இருமுறை அல்லது 2 மாதங்கள் அதற்கு மேற்பட்ட நாட்களில் மாதவிடாய் வர நேரிடலாம்.
இதனால் உடல் எடை அதிகரித்தல், கருத்தரிப்பதில் பிரச்சனை தொடங்கி இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் ஒன்று Mensovit Plus.
இதன் பயன்கள், பக்கவிளைவுகள், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
Shutterstock
பயன்கள்
ஆயுர்வேத கலவைகளால் ஆன Mensovit Plus மாத்திரைகளில் Aristolochia Bracteata மற்றும் Ferula Asafoetida நிறைந்துள்ளது.
இதில் Aristolochia Bracteata கருப்பை தொடர்பான பிரச்சனைகளையும், Ferula Asafoetida மாதவிடாயின் போது ஏற்படும் அதீத ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
பெரும்பாலும் மாதவிடாய் உடனே வருவதற்கு Mensovit Plus மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.
இதுதவிர பெண்களுக்கான சிறுநீரக பாதைத் தொற்று, மாதவிடாயின் போது வலியுடன் கூடிய அதீத ரத்தப்போக்கு, பிறப்புறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
மிக முக்கியமாக காரணமின்றி கருகலைவதை தடுப்பதற்கும், குறைபிரசவம் ஆவதை தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பக்கவிளைவுகள்
- குமட்டல்
- வாந்தி
- தலைவலி
- அடிவயிற்றில் வலி
- அடிவயிற்றில் தசைப்பிடிப்பு
இது பொதுவான பக்கவிளைவுகளாகும், இதைதவிர வேறு சில பக்கவிளைவுகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்கள் மற்றும் பரிந்துரைக்கும் அளவுகளில் மட்டுமே Mensovit Plus மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
Getty Images/iStockphoto
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
தாய்ப்பால் அளிக்கும் பெண்கள், கர்ப்பிணிகள் மருத்துவர்கள் ஆலோசனையின்றி Mensovit Plus மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.
சிறுநீரக நோயாளிகள், கல்லீரல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களும் Mensovit Plus மாத்திரைகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
எந்த மாத்திரையாக இருந்தாலும் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சுயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம், வேறு ஏதேனும் நோய்க்கு நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்பவராக இருந்தால் அதைப்பற்றியும் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.