ஆரம்பமாகும் செவ்வாய் பெயர்ச்சி... ராஜயோகத்தை தட்டித்தூக்கும் 4 ராசிகள்
செவ்வாய் பெயர்ச்சியினால் மே 11ம் தேதியிலிருந்து அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருக்கும் ராசிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் கிரகம் ஒருவரது ஜாதகத்தில் வலுவாக இருந்தால் வாழ்க்கையில் பெரிய சாதனைகளை செய்ய முடியுமாம். அந்த வகையில் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியினை மாற்றுகின்றார் செவ்வாய்.
வரும் மே 11ம் தேதி செவ்வாய் கிரகம் மேஷ ராசியினுள் நுழைகின்றார். இந்த நேரத்தில் தைரியம், தன்னம்பிக்கை, பலம் என அனைத்தும் அதிகரிக்குமாம்.
இந்த செவ்வாய் பெயர்ச்சியினால் எந்தெந்த ராசியினர் சிறப்பான பலனைப் பெறுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி
செவ்வாய் மேஷ ராசியினுள் நுழைவதால் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதுடன், தைரியம், ஆற்றல் கிடைப்பதுடன், எதிர்பாராத பண வரவும் கிடைக்கும்.

கடகம்
செவ்வாய் பெயர்ச்சியினால் கடக ராசியினருக்கு அதிர்ஷ்டம் அதிகரிப்பதுடன், முன்பை விட பிரகாசமாக இருப்பீர்கள்.
வாழ்க்கையில் அடுத்தடுத்து வெற்றி கிடைப்பதுடன், தொழில் மற்றும் வாழ்க்கை இரண்டிலும் இந்த நேரம் மிகவும் சாதகமாகவே இருக்கும்.

கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியானது வாழ்க்கையில் நல்லதொரு திருப்பத்தினை ஏற்படுத்துவதுடன், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வேலையும் சுமூகமாக முடியுமாம்.
உங்களது ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கு இந்த நேரம் மிகவும் சாதகமான நேரமாக இருக்கின்றது.

கும்பம்
கும்ப ராசியினர் இந்த செவ்வாய் பெயர்ச்சியினால் தொழில் மற்றும் வர்த்தகத்தில் நல்ல பலனை அடைவதுடன், ஆராய்ச்சி துறையிலும் மேன்மை கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து சம்பந்தமாக விடயங்களில் லாபம் பெறுவதற்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாவதுடன், வெளிநாடு பயணம் நல்ல பலனையும் கொடுக்குமாம். வியாபாரத்தில் லாபம் அதிகமாகவே கிடைக்குமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |