சத்தமில்லாமல் திருமணம் செய்த பிரியங்கா தேஷ்பாண்டே... திடீரென இப்படியொரு புகைப்படம் வெளியிட்டது ஏன்?
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திடீரென வெளியிட்டுள்ள ஒற்றை புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரியங்கா தேஷ்பாண்டே
சினிமா காரம் காபி என்ற நிகழ்ச்சிக்காக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று வரையில் மங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் இவரின் தனித்துவமான பாணி பலருக்கும் பிடித்துப்போன ஒன்று.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவருடன் முதல் திருமணத்தை பிரியங்கா நடத்தி முடித்த நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
அதன் பின்னர் பிரியங்கா தேஷ்பாண்டே வசி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட தகவல் அண்மைகாலமாக இணையத்தில் அனல் பறந்த நிலையில், இவர்களின் புதிய அப்டேட்களை ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
பிரியங்காவின் புதிய பதிவு
இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் பதிவுகளை வெளியிடுவார். அந்த வகையில் நேற்று திடீரென ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் அணிந்திருக்கும் டீ ஷர்ட்டில் 'உங்க வாய் உங்க உருட்டு' என எழுதியுள்ளது. அதனை பிரியங்கா யாருக்கா சொல்லியிருகின்றார்? ஒரு வேலை அவருக்கு அவரே போட்டுக்கொண்ட பதிவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறித்த பதிவு தற்போது இணையத்தில் பெரும்பாலனவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |