ஒரு வழியாக சாதித்த மணிமேகலை தம்பதி- உச்சக்கட்ட சந்தோஷத்தில் வெளியான படங்கள்
ஒரு வழியாக வீட்டு சாவியை வாங்கிய மணிமேகலை வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Vj மணிமேகலை
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்தவர் தான் மணிமேகலை.
இதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சிக் கண்டு பிரபல தொலைக்காட்சியில் டாப் நிகழ்ச்சிகளின் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்தார்.
இதனை தொடர்ந்து கோமாளியிலிருந்து விலகி, அதே நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்தார். அப்போது குக்காக வந்த பிரியங்காவுடன் ஏற்பட்ட வாக்குவாதங்கள் காரணமாக பாதி நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
அதன் பின்னர், தற்போது ஜு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் விஜய்யுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
புதிய வீட்டின் சாவியை வாங்கிய தம்பதி

வைர மூக்குத்தி பரிசு.. மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்- நயன்தாராவின் ரியாக்ஷன்
இப்படி ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் அவரது சமூக வலைத்தளங்களிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வாங்கிய வீட்டின் சாவியை வாங்கியுள்ளார்.
இதன்போது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவை பார்த்த இணையவாசிகள், தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |