கணவரை பிரிந்து இருக்க முடியாமல் சிலையுடன் வாழும் தொகுப்பாளர்! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்
கணவரை பிரிந்து வாழ முடியாமல் இருக்க முடியாமல் சிலை செய்து ரசிக்கும் மணிமேகலையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மணிமேகலை
பிரபல தொலைக்காட்சியில் பிரபலமாக தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் மணிமேகலை.
இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கோமாளியாக இருந்த மணிமேகலை சிறிய இடைவேளைக்கு பின்னர் தொகுப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து மணிமேகலை கடந்த 2017 -ம் ஆண்டு நடன கலைஞர் உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் காதல் கதை யாரை கேட்டாலும் சொல்வார்கள். மணிமேகலை அந்தளவு பிரபலமாக்கி வைத்திருக்கிறார்.
உன்னை கூடவே வச்சி டார்ச்சர் செய்வேன்..
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை அவருடைய வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விடயங்களையும் பகிர்ந்து விடுவார்.
அந்த வகையில், தற்போது வேலை விஷயமாக அமெரிக்காவில் இருக்கும் மணிமேகலை தன்னுடைய கணவர் உசேனை மிஸ் பண்ணுவதாக பதிவு பகிர்ந்து வருகிறார்.
அதில் அசல் உசேன் போல் இருக்கும் சிலையை செய்து “ அமெரிக்கா இல்லை ஆண்டிபட்டி உன்னுடைய சிரிப்பை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது உசேன்.
இதனால் நான் எனக்கு நானே பரிசு அளித்துக்கொள்கிறேன். நான் வெளிநாடு சென்றாலும் உன்னை கூடவே வச்சி டார்ச்சர் செய்வேன்.. ” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் இதனை பார்த்த இணையவாசிகள் “ வெளிநாடு சென்றால் கூட கணவர் இல்லாமல் இருக்க முடியாதா?” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |