பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த மணிமேகலை! வீட்டில் நடந்த அசம்பாவிதம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறும் மணிமேகலையின் வீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மணிமேகலை பைக் திருட்டு
குக் வித் கோமாளி உள்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் மணிமேகலை. இவர் முகமது உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் தன்னுடைய உழைப்பில் கிடைத்த பணத்தில் முதல் முதலாக தனது காதலருக்கு விலை உயர்ந்த கேடிஎம் பைக் வாங்கி கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பைக்கை அசோக் நகரில் உள்ள தனது நண்பரின் வீட்டில் நிறுத்தி இருந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பைக் காணாமல் போனதாக தெரிகிறது. இதனை அடுத்து மணிமேகலை அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உடல் எடையைக் குறைக்க கஷ்டமா? இந்த 5 உணகளில் ஒன்றை எடுத்துக்கோங்க
கலக்கத்தில் மணிமேகலை
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பைக் திருடு போன வீட்டில் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .
இதுகுறித்து மணிமேகலை தனது சமூக வலைத்தளத்தில், ‘இன்று அதிகாலை எங்களது பைக் தொலைந்துவிட்டது. திருமணத்திற்கு பிறகு கஷ்டப்பட்டு சம்பாதித்த காசில் ஆசை ஆசையாக வாங்கிய முதல் பைக், வருத்தமாக இருக்கிறது. வருஷத்துக்கு ஒரு தரம் எங்கிருந்துதான் வருமோ’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.