கலர் கலர் ரிபன் கட்டி கிளாமர் புகைப்படம் வெளியிட்ட பிரபலம்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
வி.ஜே. மகேஸ்வரி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கலர் கலர் ரிபன் தலையில் கட்டி கொண்டு கிளாமர் புகைப்படமொன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
வி. ஜே பயணம்
சன் மியூசிக்கில் பிரபல தொகுப்பானியாக பணியாற்றி பிரபலமாகியவர் தான் வி.ஜே. மகேஸ்வரி.
இவர் இந்த நிகழ்ச்சியில் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடி சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமானார்.
இதனை தொடர்ந்து சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கான ஒரு சரியான அடையாளம் கிடைக்கவில்லை.
இதனால் சிறிய விளம்பரங்கள், நிகழ்ச்சி தொகுப்பு என சிறிய சிறிய வேலைகள் செய்து வந்த நிலையில், பிக்பாஸ் 6 ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
கிளாமர் புகைப்படம்
அதில் முறையான ஈடுபாடு இல்லாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் செய்து வெளியிட்டு வந்தார்.
அந்த வகையில், கிளாமர் ஆடையில் தலையில் ரிபன் கட்டிக் கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ இது என்ன குழந்தை ஸ்டைலா? ” என கலாய்த்து வருகிறார்கள்.