பிக்பாஸிலிருந்து இன்று வெளியேறும் மகேஸ்வரி! சம்பளம் எத்தனை லட்சம்னு தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிகளை மீறிய ஷெரினா கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட நிலையில் இவர் வாங்கிய சம்பளம் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
கடந்த ஒரு மாதமாக மக்களின் பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருந்து வருவது பிக்பாஸ் நிகழ்ச்சியே. இந்த நிகழ்ச்சியில் தற்போதுள்ள சீசனில் பல அறிமுகம் இல்லாத பிரபலங்கள் உள்ளே வந்துள்ளனர்.
ஆனால் அனைவருக்கும் பரீட்சையமான முகம் என்றால் அது ஜிபி முத்து முகம் தான். ஆனால் அவர் தனது மகனை விட்டு இருக்கமுடியவில்லை என்பதால் இரண்டாவது வாரத்திலேயே வீட்டைவிட்டு சென்றுவிட்டார்.
பின்பு சாந்தி, அசல், ஷெரினா என மக்களால் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் மகேஸ்வரி வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வெளியான விடயம் உறுதியாகாத நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜே மஹேஸ்வரி ஒரு நாளைக்கு ரூ. 23 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டது என்றும், தற்போது 35 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்துள்ள நிலையில், சுமார் ரூ.8லட்சத்துடன் வெளியேறியுள்ளது தெரியவந்துள்ளது.