நான் லெஸ்பியனா? உங்களுக்கு அறிவே இல்லையா?கொந்தளிக்கும் தொகுப்பாளர் ஜாக்குலின்
நான் லெஸ்பியனா? உங்களுக்கு அறிவே இல்லையா? கடுமையாக விமர்சித்த ரசிகர்களுக்கு ஜாக்குலின் சரியான பதிலடிக் கொடுத்துள்ளார்.
மீடியா பயணம்
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானாவர் தான் ஜாக்குலின். இவர் “கலக்கப்போது யாரு” என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளர் ரக்ஷனுடன் இணைந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.
இதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் குறித்த தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் 'நெல்சன் திலீப் குமார்' இயக்கத்தில் உருவான நயனின் “கோலமாவு கோகிலா” என்ற திரைப்படத்திலும் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் எதிர்பாராத வெற்றியை கொடுத்தாலும் ஜாக்குலினுக்கு பெரியளவில் முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் மீண்டும் பிரபல தொலைக்காட்சியில், “தேன்மொழி B.A ஆண்டாள் அழகர்” என்ற சீரியலில் நடித்திருந்தார்.
லெஸ்பியனா என கேட்ட போது ஜாக்கிலின் கொடுத்த அதிரடி பதில்
இந்த நிலையில் சமிபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஜாக்குலின் அளித்த பேட்டியில் சில விடயங்களை உளறிக் கொட்டியுள்ளார்.
இதன்படி, ஆங்கராக இருக்கும் போது சில பிரபலங்கள் தோல் மீது கை போடுவார்கள் அப்போது எனக்கு ஓங்கி அடிக்கலாம் என அவர் அனுபவித்த சில விடயங்கள் குறித்து பகிர்ந்திருந்தார்.
இதனை தொடர்ந்து நீங்கள் லெஸ்பியனா? என கேட்டுள்ளார் ரசிகர்கள் இது என்ன பதில் சொல்லுவீர்கள் என கேட்டபோது, “ நண்பர்களுடன் இணைந்து போட்டோஸ் போட்டால் லெஸ்பியனா எனவும் அவர்களை பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது என கோபத்தில் கத்தியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்க்கும் போது ஜாக்கலின் அவர்கள் இந்த விடயத்தில் நிறைய பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.