நடிகர் விவேக் பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதம்.. அவரிடமிருந்து வந்த பதில் என்ன தெரியுமா?
இந்திரா காந்தி கைப்பட எழுதிய கடிதத்தை, தனது வாழ்நாள் முழுவதும் நீங்காத நினைவாக பத்திரப்படுத்தி வைத்திருந்தார், நடிகர் விவேக். நகைச்சுவை மூலம் தனது சமூக கருத்துக்களை உலகிற்கு எடுத்துக் கூறிய நடிகர் விவேக் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருக்கு பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இவரது பல காணொளிகளை சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் தீயாய் பரப்பி வருகின்றனர்.
விவேகானந்தன் என்ற இயற்பெயர் கொண்ட விவேக், நீலகிரி மாவட்டத்தின் குன்னூரை அடுத்த, ஓட்டுப்பட்டறையில் உள்ள சாந்தி விஜயா ஜூனியர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிந்து வந்தார்.
அப்போது, முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்திக்கும், தனக்கும் ஒரே நாளில் பிறந்த தினம் என்று கூறியதை நினைவில் வைத்திருந்த அவர், தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பாரத பிரதமரான இந்திரா காந்திக்கு, வாழ்த்துக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் “My Birthday Your Birthday Same Birthday, I Wish You You Wish Me” விவேக் குறிப்பிட்டிருந்தார்.
தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விவேக்குக்கு, இந்திரா காந்தி கைப்பட கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தை தனது வாழ்நாள் முழுவதும் நீங்காத நினைவாக பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.
இதுகுறித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது. குறித்த காணொளியில் நடிகை சுஹாசினியிடம் அவரது கேள்விக்கு தனது பாணியில் பதில் கூறிய விவேக் அந்நிகழ்வினை மிக அழகாக கூறியுள்ளதோ, இந்திராகாந்தி எழுதிய கடிதத்தினையும் சுஹாசினி காட்டியுள்ளார்.
விவேக், இரண்டு வயதில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்தை பற்றிய சுவாரஸ்யங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் pic.twitter.com/OolSqbR5fI
— Zee Tamil (@ZeeTamil) June 16, 2017