விவேக் மரணத்தில் தல, தளபதி இதை கூட செய்யவில்லையே! கடும் கோபத்தில் ரசிகர்கள்
நகைச்சுவை நடிகரும், தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் (59) நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை உயிரிழந்தார்.
அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள்.
மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரிலும் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் தன்னுடன் விவேக்கின் உறவு எ்பபடியிருந்தது நடிகர்கள் பலரும் கூறி தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், விஜய் மற்றும் அஜித் இருவரும் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை.
விவேக் இந்த இரு நடிகர்களுடன் அதிகமான படங்கள் நடித்திருக்கும் போதிலும் இவ்வாறு ஒரு அறிக்கை கூட வெளியிடாதது ரசிகர்களிடையே பெரும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அஜித் விஜய் இருவரும் தனிப்பட்ட முறையில் அவர்களது குடும்பத்தினரிடம் இரங்கலை தெரிவித்திருப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.