இந்தியன் 2 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய விவேக்! தீயாய் பரவும் வீடியோ... கடும் சோகத்தில் கதறும் ரசிகர்கள்
நடிகர் விவேக் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
விவேக் அவரது மறைவு தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது இறுதி அஞ்சலியிலும் இறுதிச் சடங்கிலும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
#Vivek Birthday Celebration In The Sets Of #Indian2 pic.twitter.com/7wI1ks8OpW
— chettyrajubhai (@chettyrajubhai) April 19, 2021
தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்களும் விவேக் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவருடன் பயணித்த நாட்களையும் அவருடனான அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இதில் இயக்குநர் ஷங்கர், நடிகர் பாபி சிம்ஹா மற்றும் படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.