சம்யுக்தா- விஷ்ணுகாந்த் ஆடியோ லீக்: அப்பா அம்மாவை வெச்சிக்கிட்டா அசிங்கமா பேசுவாங்க?
பிரபல சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் பிரச்சினைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கும் நடிகை தான் காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்த போது காதல் ஏற்பட்டு சுமார் ஏழு மாதங்கள் காதலித்து வந்துள்ளனர் சம்யுக்தா விஷ்ணுகாந்த்.
கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவருக்கும், வெறும் 15 நாட்களில் பிரச்சினை ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்துள்ளனர்.
இருதரப்பினரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கியதோடு, மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் விஷ்ணுகாந்த் சம்யுக்தாவின் பல ஆடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.
இந்த ஆடியோக்களுக்கு அவ்வப்போது சம்யுக்தா விளக்கம் கொடுத்து வருகின்றார். விஷ்ணுகாந்தும் தனது பக்கத்தின் விளக்கத்தினை அளித்து வருகின்றார்.
இவர்களின் பிரிவிற்கு விஜே ரவியும் ஒரு காரணம் என்றும் ரவி சம்யுக்தாவின் முன்னாள் காதலன் என்றும் பின்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஒரு காரணம் என்று கூறப்பட்டது.
தற்போது இவர்களைக் குறித்து பிரபல நடிகை ரிஹானா பல விடயங்களை பகிர்ந்துள்ள நிலையில், இவர் விஷ்ணுவிற்கு ஆதரவாக பேசுவதால் பலரும் இவரைத் திட்டியும் வருகின்றனர். ரிஹானாவின் நேர்காணல் காணொளியை இங்கு காணலாம்.