இணையத்தை ஆக்கிரமித்திருக்கும் AI Saree trend.. இவ்வளவு ஆபத்துக்களா?
சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து இருக்கும் AI Saree புகைப்படங்களால் பயனர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்படும் புகைப்படங்கள் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில், ஜெமினியின் நானோ பனானா ஏஐ தொழில்நுட்பம் தற்போது இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. செயற்கை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அதில் ஆடைகளை மாற்றம் செய்யலாம்.
அதே போன்று பயனர்களின் விருப்பங்களில் மாற்றம் செய்தால், அதற்கு ஏற்றால் போன்று எடிட் செய்யப்படும். இது போன்று AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை வடிவமைக்கும் பொழுது ஆபத்துக்கள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அப்படியாயின், என்னென்ன ஆபத்துக்களை பயனர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
இனி ஜாக்கிரதை
தற்போது பயனர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஏ.ஐ சாரி ட்ரெண்டிங்கில் பயன்படுத்தும் பொழுது சிக்கல்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
புகைப்படங்களுடன் விண்டேஜ் பாடல்களை இணைந்து சிலர் காணொளியாகவும் பதிவேற்றம் செய்கிறார்கள். இது போன்று உபயோகிக்கும் பொழுது பயனர்களின் தனிப்பட்ட படங்களை வைத்து மார்பிங் உள்ளிட்ட தவறான செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
புகைப்படங்களைத் தேர்வு செய்யும் பொழுது மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய படங்களை எடுத்து மோசடிகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த .ஐ சாரி ட்ரெண்டிங்கை பயன்படுத்தும் பொழுது லோகேசன் டேக்குகளை அணைத்து வைப்பது நல்லது.
புகைப்படங்களை பகிரும் பொழுது பயனர்கள் சற்று கவனத்துடன் இருப்பது அவர்களின் தனிப்பட்ட விடயங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு முக்கிய வழியாக பார்க்கப்படுகிறது.