ஆயிஷாவின் விவாகரத்து சர்ச்சை! வீடியோவை காட்டி நடிகர் விஸ்ணு வெளியிட்ட உண்மைகள்
பிக் பாஸ் ஆயிஷாவின் விவாகரத்து சர்ச்சை குறித்து நடிகர் விஸ்ணு ஊடகங்களிடம் பேசியுள்ளார்.
தன்னுடைய காதல் பிரிந்ததற்கு விஸ்ணு தான் காரணம் என்று ஆயிஷாவின் முன்னாள் காதலர் குற்றம் சாட்டிய செய்திகள் சமூக ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருந்தது.
நடிகர் விஸ்ணு அதிரடி பதில்
இந்த நிலையில் நடிகர் விஸ்ணு தற்போது அதற்கு விளக்கமளித்துள்ளார்.
நேர்காணல் ஒனறில் டி.டி பேசிய வீடியோ ஒன்றையும் போட்டு காட்டுகின்றார்.
‘ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு தப்பான பொருளை தேர்ந்தெடுத்துவிட்டால் அதை யோசிக்காமல் கீழே வைத்துவிடுங்கள். அவன் என்ன சொல்லுவான், இவள் என்ன பேசுவாள் என்றெல்லாம் யோசிக்காதீர்கள்’ வைத்து விட்டால் இரண்டு நாட்கள் தான் எல்லோரும் பேசுவார்கள் என்று டி.டி குறிப்பிடுகின்றார்.
ஆயிஷா எடுத்த முடிவு தவறு இல்லை
அதனை போட்டு காட்டிய நடிகர் விஸ்ணு ஒரு பெண் இங்கு இல்லாத போது அவரை பற்றி தவராக பேசக்கூடாது.
ஆயிஷா இந்த வீடியோவில் இருப்பது போல ஒரு தப்பான பொருளை எடுத்து இருக்கிறார். அதனால் தான் அவர் அவனை விட்டு வந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
இப்படி நடிகர் விஸ்ணு பேசியிருப்பது ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகின்றது.