பேரக்குழந்தைக்கு யோகா டீச்சராக மாறிய ராதிகா.. அலப்பறைகளை காணொளியாக போட்ட மகள்
பேரக்குழந்தைக்கு யோகா டீச்சராக மாறிய ராதிகாவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை ராதிகா
தமிழ் சினிமா பின்னணியில், சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் நடிகை ராதிகா சரத்குமார். இந்தியா, இலங்கை மற்றும் லண்டனில் படித்த ராதிகா படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இயக்குநர் பாதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
இவர், முதல் படம் நல்ல வரவேற்பை கொடுத்த காரணத்தினால் தொடர்ந்து படவாய்ப்பு குவிய ஆரம்பித்தது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியிருக்கிறார். நடிகையையும் தாண்டி தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்துள்ளார்.
இதற்கிடையில், நடிகர் பிரதாப் போத்தனை காதலித்து திருமணம் செய்தார். அதன் பிறகு ஒரே வருடத்தில் அவரை விவாகரத்தும் செய்து ரிச்சர்டு ஹார்டியை 2ஆவது திருமணம் செய்தார்.
யோகா டீச்சராக மாறிய தருணம்
2 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரையும் விவாகரத்து செய்து விட்டு கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராயனே ஹார்டி என்ற மகள் இருக்கிறார்.
இவர், கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை திருமணம் செய்து கொண்டார். தேசிய விருது, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில விருது என ஏகப்பட்ட விருதுகளை குவித்து வைத்திருக்கும் ராதிகா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
குடும்பத்தில் நடக்கும் விடயங்களை காணொளியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார். அந்த வகையில், ராதிகா அவருடைய மகள் குழந்தைக்கு யோகா கற்றுக் கொடுக்கும் காணொளியை பகிர்ந்துள்ளார்.
அந்த காணொளியில் என்னுடைய அம்மா யோகா டீச்சராக மாறியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள், வேடிக்கையான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |