அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம்: வெற்றிக்கு பின் டிவில்லியர்ஸை புகழ்ந்த கோஹ்லி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்பின்னர், பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோஹ்லி களமிறங்கினர்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே விராட் 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து, களமிறங்கிய மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் இறுதி வரை நிலைத்து நின்று ஆடிய டிவில்லியர்ஸ் 34 பந்துகளில் 76 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
இறுதியில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது. இதையடுத்து கொல்கத்தா அணி 205 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய ராணா 18 ரன்களுடனும், கில் 21 ரன்களுடனும் அவுட் ஆகி வெளியேறினர். இதனையடுத்து, களமிறங்கி நிதானமாக ஆடிய திரிபாதி 25 ரன்களுடனும், மோர்கன் 29 ரன்களுடனும் வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, களமிறங்கி அணியை சற்று முன்னேற்றத்திற்கு கொண்டு சென்ற ஹசல் 26 ரன்களுடனும், ரஸ்ஸல் 31 ரன்களுடனும் அவுட் ஆகினர்.
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து, வெற்றிக்குபின்னர் பேசிய கேப்டன் கோக்லி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அற்புதமாக ஆடினர். டிவில்லியர்ஸ் பார்மில் இருக்கும் போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம்.
மேலும், வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் நாங்கள் 40 ரன்கள் கூடுதலாக எடுத்ததாக நினைக்கிறேன் எனக் கூறினார்.
ட்விட்டர் பக்கத்திலும், என்ன ஒரு சிறப்பான மாலை, தொடர்ந்து 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றது 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இந்த நாள்.
உங்கள் அன்பிற்கும், ஆதரவுக்கும் ஒவ்வொருத்தருக்குமே நன்றி என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா கேப்டன் மோர்கன் கூறுகையில், “நாங்கள் நினைத்ததை விட ஆடுகளம் நன்றாக இருந்தது. பேட்டிங்கில் இது பெங்களூரு அணிக்குரிய நாளாக அமைந்தது.
சென்னை ஆடுகளம் என்னை திகைக்க வைக்கிறது. ஆடுகள தன்மையை கணிப்பது கடினமாக உள்ளது. சென்னையை விட்டு கிளம்பி இனி அடுத்த இடத்தில் விளையாட இருப்பது மகிழ்ச்சியே என பேசியுள்ளார்.
What a special evening, today.
— Virat Kohli (@imVkohli) April 18, 2021
3 out of 3 wins & my debut for this amazing franchise 13 years ago, on this day. Thank you to each one of you for your love & support. ❤️@RCBTweets pic.twitter.com/fTLoVsNbU3