என் வாழ்க்கையில் இப்படி நடந்தது இல்லை... மோசமான விளையாட்டுக்கு மவுனம் கலைத்த விராட் கோலி!
இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி கேப்டன் பதவி ராஜினாமாவிற்கு பின் ரன்களை குவிக்க கடந்த 2 வருடங்களாக திணறி வருகிறார்.
நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளிலும், தொடர்ந்து ரன்களை அடிக்க தடுமாறி வரும் அவர், மூன்று முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
சொற்ப ரன்களிலேயே வெளியேறி இவர், 48 ரன்கள், 58 ரன்கள் என ஒட்டுமொத்தமாக 216 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை அதிக ரன்கள் அடித்தவர்களில் முதல் இடத்தில் இருக்கும், கோலி இந்த சீசனில் இப்படி திணறி வருவது ரசிகர்களை மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி மோதும் முக்கிய தொடர்கள் அறிவிப்பு!
மனம் உருகிய விராட்கோலி
இதுகுறித்து தற்போது மனம் திறந்த விராட்கோலி, எனது இரண்டாவது டக் அவுட்டிற்கு பிறகு நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். என் கேரியரில் இப்படி நடந்தது இல்லை... அதனால் தான் சிரித்தப்படியே நடந்தேன்.. நான் கற்க வேண்டிய அனைத்தையும் இப்போது கற்றுக்கொண்டேன்.
மேலும், கோலிக்கு இதுவரை ஆர்சிபி அணியில் உத்வேகமாக இருந்த நண்பர் ஏபிடி வில்லியர்ஸ் அடுத்த் ஆண்டில் புதிய ரோலில் ஆர்சிபிக்கு திரும்புவார் என விராட் கோலி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
என்னதான் ஒரு நம்பிக்கை நட்சத்திர வீரர்கள் இதுபோன்ற ஐபிஎல் தொடர்களில் சொதப்பினாலும், இந்திய அணிக்காக அவர் விளையாடும் போது உத்வேகத்துடன் பழைய ஃபார்முக்கு திரும்ப வேண்டும் திரும்பிவிடுவார் என முன்னாள் வீரர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்,