ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி மோதும் முக்கிய தொடர்கள் அறிவிப்பு!
இந்தியாவில், சர்வதேச போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகளுக்கு ஆண்டுதோறும் மவுசு அதிகமாகவே உள்ளது. அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு இப்போதே தயாராகும் வகையில் ஒரு நல்ல வாய்ப்பாக ஐபிஎல் தொடர் இருக்கும் என இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஐபிஎல் முடிந்ததும் வரும் ஜூன் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என கூறப்படுகிறது.
அதன் பின்பு, அயர்லாந்துக்கு பறக்கும் இந்தியா அங்கு வரும் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
தொடர்ந்து, இங்கிலாந்தில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியிலும் விளையாடுகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பின், மேற்கிந்திய தீவுடன் எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும் 5 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது.
இதெல்லாம் முடிந்த பின், வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கிறது.
இந்த தொடர் இம்முறை டி20 உலக கோப்பைக்கு தயாராவதற்காக 20 ஓவர் தொடராக நடைபெற உள்ளது. அதை முடித்துவிட்டு நேரடியாக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்தியா பங்கேற்பதாக இருந்தது.
ஆனால், தற்போது அதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் டி20 தொடரில் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, 2022/23 ஆண்டிற்கான தங்களது கிரிக்கெட் கால அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
அதில் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
UPDATE ?
— Fox Cricket (@FoxCricket) May 10, 2022
It's going to be a wild ride for the Aussie men >>> https://t.co/3T0NGMKwUX pic.twitter.com/cy0uaDGcmQ