பசியில் பழங்களை கொத்தாக தூக்கிச் செல்லும் கரடி - மனிதர்களை போல அசால்டாக செய்த காரியம்
சாப்பிடுவதற்கு பழங்களை கொத்தாக கரடி ஒன்று தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பசி எடுத்துவிட்டால் போதும் என்ன கிடைத்தாலும் பசி அடங்கும் வரை சாப்பிட்டுவிடுவோம்.
விட்டரில் வைரலாகியிருக்கும் வீடியோ ஒன்றில் கரடி ஒன்று, தனக்கு பிடித்த பழத்தை கொத்தாக தூக்கிச் செல்கிறது.
அது எப்படி தூக்கிச் செல்கிறது என்பது தான் இங்கு ஹைலைட்.
Who can relate? ? pic.twitter.com/1dhgO6pUS3
— Buitengebieden (@buitengebieden) July 7, 2022
கைகளில் நிரம்ப பழத்தை தூக்கியிருக்கும் கரடி, கால்கள் இரண்டிலும் இரு பழங்களை இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறது. இந்தக் காட்சியை யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்திலும் பகிர்ந்துள்ளார்.
மனிதர்களை விஞ்சும் அளவுக்கு கரடிக்கு அந்த பழத்தின் மீதான ஆசை இருந்திருக்கிறது. கிட்டதட்ட 20 பழங்களை அசால்டாக எடுத்துக் கொண்டு நடந்து செல்கிறது. வீடியோவைப் பார்த்த பலரும் கரடியை பார்த்து வயிறு குலுங்கச் சிரித்து வருகின்றனர்.