நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது...காசை எண்ணி கணீர் சிந்த வைத்த தாத்தா!
நாள் முழுவதும் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை முதியவர் எண்ணும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தனது சைக்கிளில் சின்ன தட்டு,முட்டு சாமான்களை விற்பனை செய்யும் ஒரு முதியவர் சாலையோரம் உள்ள கடையில் அமர்ந்து, தான் நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை எண்ணுவதை காண முடிகின்றது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை சற்று கவனமாகப் பார்த்தால், அந்த ரூபாய் நோட்டுகளும் சில்லறை காயின்களும் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது.
அவரது முகத்தில் உள்ள முகபாவம் மற்றும் கைகளின் அசைவு மூலம் அந்த சிறிய தொகையும் அவருக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் அதை சம்பாதிக்க அவருக்கு இருக்கும் நிர்பந்தத்தையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
दिनभर की कमाई ?❤️ pic.twitter.com/pHEqKvflLN
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) September 20, 2022