இலங்கை ஜனாதிபதியின் படுக்கையறையில் நடக்கும் கூத்து! ஒரு இடத்தையும் விட்டு வைக்காத போராட்டக்காரர்கள்
இலங்கை ஜனாதிபதியின் படுக்கையறை போராட்டக்காரர்கள் செய்யும் அலப்பறை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்றி கொள்ளாமல் மக்கள் தவித்து வந்த நிலையில் இதற்கு காரணமாக ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
Video - #WWE Wrestling on Prime Minister's bed at Temple Trees ?#LKA #SriLanka #SriLankaCrisis #SriLankaProtests pic.twitter.com/5f2zE9uqLD
— Sri Lanka Tweet ?? ? (@SriLankaTweet) July 10, 2022
போராட்டம் ஒருபக்கம் தீவிரமடைந்த நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை.
இந்நிலையில் தான், இலங்கையில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேயும் தனது பதவியை விட்டு செல்ல வேண்டும் என்று கொழும்புவில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர், மாணவ அமைப்பினர்,தொழிற்சங்க அமைப்புகள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்தனர்.
They finished it with a pool party. The best protest ever. ??pic.twitter.com/P5O0jRDYAu
— Dr. George ? (@GeorgeAnagli) July 9, 2022
இதோடு ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை ஜனாதிபதி மாளிகை முன்பாக குவிந்து போராட்டம் நடத்தியதோடு அதிபர் வீட்டிற்குள் புகுந்து பந்தாடிய செய்திகள் வைரலாகி கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதி வீட்டை அல்லோலப்படுத்திவிட்ட போராட்டக்காரர்கள் அங்கு அமர்ந்து பிரேக்கிங் செய்தி பார்ப்பது. படுக்கை அறையில் விளையாடுவது, அங்குள்ள நீச்சல் குளத்தை ஆக்கிரமித்து குளித்து குத்தாட்டம் போடுவது என்று ரணகளப்படுத்தி வருகின்றனர்.


