viral video: பழம் விற்கும் முதாட்டி - இந்த கஷ்டத்திலும் இப்படி ஒரு நேர்மையா?
சாலையோரம் பழம் விற்கும் மூதாட்டி ஒருவரின் நேர்மையான செயல் பார்வையாளர்களை நெகிழச்சி அடைய செய்துள்ளது.
வைரல் வீடியோ
சாலையோரத்தில் பழம் விற்கும் மூதாட்டி ஒருவரின் நேர்மை மற்றும் சுயமரியாதையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மூதாட்டி பழம் விற்கும் இடத்திற்கு சுற்றுலா பயணியாக வந்த ஒருவர் பழத்ாிற்கு உரிய பணத்தை விட அதிகமாக பணம் கொடுக்கிறார்.
அந்த மூதாட்டி தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கூடுதல் பணத்தை மென்மையாக மறுத்து, தான் விற்கும் பொருளுக்குரிய பணத்தை மட்டுமே பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருந்த காட்சி தற்போது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

அவரது நிதானமான பேச்சு, எளிமையான செயல்கள் மற்றும் அந்தப் புன்னகை பலரது மனதைத் தொட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இந்தக் காலத்தில் இதுபோன்ற மனிதர்களைப் பார்ப்பதே அரிது, என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த காணொளியில் ஏதும் திட்ம் போட்டு செய்தது போல தெரியவில்லை. தனது கஷ்டத்திலும் தனக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட பணம் வேண்டாம் என்று கூறும் மூதாட்டியின் செயல் தற்போது மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |