மாணவிக்கு வந்த புற்றுநோய் - ஆதரவாக மொட்டையடித்த ஆசிரியர்,மாணவர்கள்
ராஜஸ்தானில் ஒரு பள்ளி மாணவிக்கு புற்றுநோய் வந்துள்ளது. இதனால் ஆசிரியர் மாணவர்கள் மொட்டையடித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த சம்பவம் தற்போது அனைத்து மக்களையும் ஈர்த்துள்ளது. புற்றோய் ஒரு திவிரமான நோய்.
இந்த நோய் ஒரு தொற்றாத நோய் என்றாலும் இதனால் பாதிக்கப்பட்டவர் மிகவும் அவஸ்தைபடுவார்கள். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் புற்றுநோய் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த நோய்க்கு ஒரு வயது வித்தியாசமே இல்லாமல் போய் விட்டது. வயது வித்தியாசமின்றி மக்கள் இந்த நோய்க்கு பலியாகி வருகின்றனர். புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை அவசியமாகிறது.

இந்த கீமோதெரபி மிகவும் வேதனையான சிகிச்சையாகும். அச்சமயத்தில் புற்றுநோய் நோயாளியின் முடி முற்றிலுமாக உதிர்ந்துவிடும்.சமீபத்தில், ஒரு பள்ளி குழந்தைக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் சிறுமியின் தலைமுடி உதிரத்தொடங்கி உள்ளது. இதை அறிந்ததும், வகுப்பறையில் இருந்த அனைத்து குழந்தைகளும் பாதிக்கப்பட்டவருக்கு தைரியத்தை ஊட்டும் வகையில் தங்கள் தலைமுடியை மொட்டையடித்துக் கொண்டுள்ளனர்.
இந்த மாணவர்களின் மனிதாபிமானத்தையும் தியாகத்தையும் பார்த்த அசிரியர்கள் அவர்களும் மொட்டை அடித்துக்கொண்டுள்ளனர். இந்த காணொளி தற்போது மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |