என்னவொரு கண்கொள்ளா காட்சி: கணவரை இழந்த நிலையில் மீண்டும் ஹீரோயினாக மாறும் பிரபலம்!
பிரபல நடிகையான மீனா தேரில் வந்து ரசிகர்களை வியப்படைய வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவிற்குள் மீனாவின் சாதனை
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் நடிகர் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து முத்து படத்தின் மூலம் உலக முழுவதும் பிரபல்யமானார்.
இவரின் யதார்த்தமான முக அமைப்பாலும் குழந்தை சிரிப்பாலும் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த கணிணி பொறியிலாளர் வித்யாசாகரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அழகாக ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
கிலுகிலுப்பாக திரியும் மீனா
இந்த நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் மீனா அவரது சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது போட்டோ ஷுட் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நிலையில், முத்து படத்தில் போல் தேரில் வந்து மீண்டும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.
இவரை இந்த காட்சி பார்க்கும் போது மீண்டும் முத்து படத்தை ஒரு முறை மீட்டு பார்த்தால் போல் இருந்தது என இணையவாசிகள் கமண்ட் செய்து வருகிறார்கள்.