விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி! இதைப் பாருங்க.. உங்களுக்கு நம்பிக்கை தானா பிறக்கும்...
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என நிரூபித்து வெற்றிக்கனியை பறிக்கும் சிறுவனுடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
இந்த வாக்கியத்தை மெய்ப்பிக்கும் கதைகள் பல நாம் கேட்டிருப்போம். தற்போதைய நவீன யுகத்தில் இந்த சொற்களின் காட்சிகளை காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஏழு வயது மதிக்கத்தக்க சிறுவன் (பார்ப்பதற்கு சிறுமி போல் இருப்பதால், பலர் தவறாக நினைத்து விடுகின்றனர்) ஒருவன் எந்தவித உபகரணங்களின் உதவியும் இல்லாமல், 10 அடி உயரமுள்ள ஒரு தூணில் ஏற முயற்சி செய்கிறான்.
This Kid is my Guru ? ? ?? pic.twitter.com/eiUPxxLzzG
— Dr. M V Rao, IAS (@mvraoforindia) May 27, 2021
முதலில் அவனால் அந்த தூணில் முழுமையாக ஏற முடியவில்லை.ஆனால் அவன் அதனால் சோர்ந்து போகவில்லை.
விடாமல் முயன்று கொண்டே இருக்கிறான். பாதி தூரம் ஏறி விட்டு சறுக்கிக் கீழே விழுகிறான். ஆனாலும் அவன் தனது முயற்சியை நிறுத்தவில்லை.
ஏழெட்டு முறை தீவிரமாக முயன்ற பிறகு அந்த தூணில் சரசரவென மேலே ஏறி மேற்கூரையை தொட்டுவிட்டு சர்ரென கீழே இறங்குகிறான் அந்த சிறுவன். இறங்கிவிட்டு 'கூகூகூ' என கூச்சலிட்டு தனது வெற்றிக் களிப்பை வெளிப்படுத்துகிறான் அந்த நம்பிக்கை நாயகன்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் மெய்சிலிர்த்து போயுள்ளனர்