அப்பா தனுஷை போலவே வேட்டி சட்டையில் வந்த மகன்கள்! அரங்கத்தையே அதிர விட்ட அனிருத்தின் குத்தாட்டம்
நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ல் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தின் தாய் கிழவி உள்ளிட்ட 4 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் எதிர்பார்த்ததை போலவே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன.

நிகழ்ச்சியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் ஏற்பாடு செய்திருந்தது.
#Thiruchitrambalam 4th single #Thenmozhi live performance from #DnA @dhanushkraja @anirudhofficial ..how aptttt?? pic.twitter.com/5OowstE3Wr
— FLL-Films Love Life (@FilmsLoveLife) July 31, 2022
ஹாலிவுட் ரேஞ்சுக்கு ரெட் கார்ப்பெட் எல்லாம் போடப்பட்டிருந்தது.
#Thiruchitrambalam audio launch?@dhanushkraja Anna❤️ @theSreyas Anna❤️@anirudhofficial . #DnA Combo???
— Mohan Raj (@mohan_06_) July 31, 2022
Crowd with DnA???
Full video on streaming coming soon @sunpictures??✨#Thiruchitrambalam❤️✨ #Thiruchitrambalamaudiolaunch #thalaivaah??? #dna #thaikelavi pic.twitter.com/19hK3DXM9O
இந்த நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து மேடையில் இசைக்கச்சேரி நடத்தினர். இருவரும் வேட்டி சட்டையில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனிடையே தனுஷின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவும் நிகழ்ச்சியில் வேட்டி சட்டையுடன் கலந்துக் கொண்டனர். இதில் யாத்ரா, தன்னுடைய தந்தையை அப்படியே பிரதிபலித்தார்.
தற்போது தனுஷ், அனிருத் சேர்ந்து பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.