திருச்சிற்றம்பலம் பட ஆடியோ விழாவிற்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்! என்ன ஆனது?
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நித்யா மேனன்.
இவரின் நடிப்புக்கும், அழகுக்குமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில், நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
sunpictures
காலில் ஏற்பட்ட காயம்
கடந்த ஒரு மாதாகவே, நித்யா மேனன் வீல் சேரில் இருந்தபடி இருக்கிறார். கணுக்கால் காயம் காரணமாக, அவரால் நடக்க முடியவில்லை. படியில் இருந்து தவறி விழுந்ததால் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட, அதன்பிறகு சில நாட்கள் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்துவந்தார்.
சமீபத்தில் இதுகுறித்து பேசியிருந்த அவர், “இப்போது என் கணுக்கால் நன்றாக இருக்கிறது, என் வேலையை நான் இப்போது தொடங்க ஆரம்பித்துவிட்டேன்.
எனது காலால் எனது எடையை தாங்க முடிகிறது. இப்படி அசையாமல் இருக்கும் நிலை ஏற்பட்டதை நினைத்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இது சரியான நேரத்தில் தான் நடந்திருக்கிறது, ஏனெனில் கிடப்பில் கிடந்த எனது பணிகள் அனைத்தையும் நான் நிறைவு செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.