ஆழ்துளையில் உயிருக்கு போராடிய குழந்தை...அதிரடியாக செயற்பட்ட ராணுவத்தினர்! திக் திக் நிமிடங்கள்
குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தையை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
துடாபூர் கிராமத்தில் உள்ள பண்ணையில் குழந்தையின் பெற்றோர் பணியாற்றி வருகின்றனர்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிவம் நேற்றிரவு 8 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

சுமார் 25 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை ராணுவ வீரர்களும், போலீசாரும் நிகழ்விடத்திற்கு வந்து 40 நிமிடங்களில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர்.
இதேவேளை, குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விரைந்து செயற்பட்டு குழந்தையின் உயிரை காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கும், போலீசாருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
