வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியர்! மாணவிகள் செய்த காரியம்
வகுப்பறையில் குரட்டைவிட்டு தூங்கிய ஆசிரியர் ஒருவருக்கு மாணவி ஒருவர் விசிறி மூலம் காற்று வீசியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வகுப்பறையில் ஆசிரியர்
சமீப காலமாக பள்ளி வகுப்பறையில் மாணவ மாணவிகள் செய்யும் அலப்பறைகள் காணொளியாக வைரலாகி வருகின்றது. இங்கும் அதே போன்று காணொளி ஒன்று நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் வகுப்பில் குறும்பு செய்வதையும், ஆசிரியர்கள் அவர்களை அடக்க முடியாமல் அவதிப்படுவதையும் பார்த்துள்ளோம்.
சில பள்ளிகளில் மாணவர்கள் என்னதான் குறும்பு செய்தாலும், அதை கண்டுகொள்ளாமல் ஆசிரியர்கள் பிற வேலைகளில் ஈடுபட்டுள்ளதையும் பார்த்துள்ளோம்.
சில இடங்களிலோ ஆசிரியர்கள் அமைதியாக ஓய்வெடுப்பதையும் சொந்த வேலைகளில் ஈடுபடுவதையும் கூட பார்த்துள்ளோம்.

குரட்டைவிட்டு தூங்கிய ஆசிரியர்
பீகாரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மிகவும் சுகமாக உறங்கிக் கொண்டிருக்க, மாணவி ஒருவர் கைவிசிறி ஒன்று கொண்டு அவருக்கு விசிறி விடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதை யாரோ ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது மிக வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.
இந்த வீடியோவில் காணப்படுவது போல் நாட்டின் பல அரசுப் பள்ளிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. பள்ளியில் அனைத்து குழந்தைகளும் படித்துக்கொண்டிருப்பதையும், ஆசிரியர் நாற்காலியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது.
ஆசிரியை ஒரு மாணவியை தனது தூக்கத்துக்கு உதவும் வகையில், கைவிசிறியால் வீச சொல்லியிருப்பது இன்னும் கொடுமையான விஷயமாகும்.