போக வேண்டாம்...அரசு பள்ளி ஆசிரியரை கட்டி பிடித்து கதறி கதறி அழும் மாணவர்கள்
உத்திர பிரதேசத்தின் லக்னோ பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்றத்தை ஏற்க முடியாத அப்பள்ளியின் மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுது பிரியா விடை அளித்துள்ளனர்.
இந்த சம்பவம், காண்போரின் நெஞ்சை நெகிழ செய்கிறது.
பெரும்பாலும் ஆசிரியர்கள் என்றாலே வில்லன்கள் போன்ற சித்தரிப்பு தான் காணப்படும்.
ஆனால், இங்கே, உத்திர பிரதேசத்தின் லக்னோ பகுதியில் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு நல்லதோரு தோழனாக, அவர்கள் இடையே ஒரு ஹீரோவாக இருந்துள்ளார்.
एक स्कूल शिक्षक के स्थानांतरण के बाद विदाई. pic.twitter.com/1PQg0b1mCL
— Awanish Sharan (@AwanishSharan) July 15, 2022
ஆசிரியரை கட்டியனைத்து அழும் மாணவர்கள்
திடீரென வந்த பணியிட மாற்றத்தை ஏற்று அவர் தனது கடைசி நாள் பணியை முடித்து, புறப்பட தயாராகிறார்.
அந்த ஆசிரியர் இனி தங்களுக்கு பாடம் எடுக்க மாட்டார், அவருடன் இனி தினமும் பேச இயலாது என்பதை தாங்கிக்கொள்ள முடியாத மாணவர்கள் பலர், அவர் பின்னாடியே நடந்து சென்று, அன்பின் மிகுதியில் அழுதபடி அவரை கட்டியணைத்த பிரியா விடை அளித்த வீடியோ காண்போரை மனதை நெகிழ வைக்கிறது.