பழங்குடியின சிறுமியை விடாமல் துரத்தி துரத்தி உதைத்த சிறுவன்...பதற வைத்த காட்சி!
இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் பழங்குடியின சிறுமியை வேறொரு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் சரமாரியாக உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி பக்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பழங்குடியின மாணவி என்று தெரிய வந்துள்ளது.
வீடியோவில், சிறுவன் சிறுமியை மீண்டும் மீண்டும் உதைப்பதைக் காணலாம்.
#Jharkhand: CM Hemant Soren has directed police to identify the accused and take appropriate action after a video of a school girl being beaten by a young boy went viral on social media.@NewIndianXpress@TheMornStandard @santwana99 pic.twitter.com/Adi992Un64
— Mukesh Ranjan (@Mukesh_TNIE) May 22, 2022
சிறுமி சீருடையில் பள்ளிப் பையை ஏந்தியவாறு காணப்படுகிறார். அவரை சிறுவன் ஒருவர் இடைவிடாது தாக்குகின்றார்.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்திய பொலிஸார், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தும்கா மாவட்டத்தில் வசிப்பவர் என்பதை கண்டுப்பிடித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் போலீஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.