ரயில் நிலைய நாய்கள் மீது அன்பை பொழியும் சோனு சூட்: வைரல் வீடியோ!
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த போது பொதுமக்களை நெகிழ வைக்ககூடிய வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பாரக்கும் சோனு சூட் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருந்தார்.
இவர் தமிழ் சினிமாவில் "கள்ளழகர்" என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக நடித்து திரைத்துறையில் நடிகராக அறிமுகமானவர்.
இதனைத் தொடர்ந்து நெஞ்சினிலே, அருந்ததி, சந்திரமுகி ஆகிய சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.
இலவச விமானம்

கொரோனா சமயத்தில், பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகளுக்கு சொந்த ஊர் திரும்ப இலவச விமான பயணத்தை இவர் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.
மேலும், உதவி வேண்டி பொதுமக்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தாலும் சோனு சூட் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
வைரல் வீடியோ
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையின் போய்சார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு ரயிலில் சென்ற சோனு சூட், சக பயணிகளிடம் பேசிக்கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரவாகி வருகிறது.
இந்த வீடியோவை சோனு சூட் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
All Love ?❤️ pic.twitter.com/ozs1UP6PZS
— sonu sood (@SonuSood) September 30, 2022
அந்த வீடியோவில் சோனு சூட்,"அடுத்த முறை ரயில்வே நிலையங்களில் நாய்களை பார்த்தால் உங்களுடைய அன்பை வெளிப்படுத்துங்கள்.
அவை எப்போதும் அதற்கு பதிலளிக்கும்" எனக் கூறுயிருக்கிறார்.