பொம்மைகார் மோதியதில் உயிரிழந்த நாய்: குறும்பின் உச்சக்கட்டம்!
தற்போது சமூக வலையத்தளங்களில் மனிதர்களை விட மிருகங்களின் சேட்டை அதிகரித்து வருகிறது. இவைகளின் வேடிக்கைகளுக்கு பாரபட்சம் பாரக்காமல் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
ஆஸ்கார் விருது
அந்த வகையில் பொம்மை கார் மோதியதில் விபத்துக்குள்ளான நாய், உயிரிழப்பது போல் நடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நாய்க்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என்ற வாசகத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் சாலையில் அந்நாய் நடந்து வருவது போலவும், எதிரே வந்த கார் அதன் மீது மோதுவது போலவும் அதனால் நாயின் கால் உடைந்து சற்று நொண்டியபடி வந்து கீழே விழுந்து உயிரிழந்து விடுவது போல் அச்சு அசலாக உண்மையான விபத்துக்குள்ளான நாய் போலவே நடித்துள்ளது.
The Oscar goes to.. 😅 pic.twitter.com/m6o3rlRXVp
— Buitengebieden (@buitengebieden) October 4, 2022
இந்த வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கமையினால் அதிகமாக பகிரப்படுகிறது.