தாயை மிரட்டிய சிங்க குட்டி! வைரல் வீடியோ
விலங்குகளில் வேட்டையாடும் தன்மை கொண்ட சிங்கம் துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த சிங்கமே அச்சப்படும் வகையிலான வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “பெண் சிங்கம் ஒன்று தரையில் படுத்தபடி ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறது. இரண்டு சிங்க குட்டிகள் அதனை சுற்றி உள்ளன. ஒரு சிங்க குட்டி முன்னால் இருந்து தாயை நோக்கி முன்னேறுகிறது.
ஆனால், பெண் சிங்கத்தின் பின்னால் இருந்த சிங்க குட்டி மெல்ல, பதுங்கியபடி முன்னேறி செல்கிறது.
ஒரு கட்டத்தில் முன்னே இருந்த சிங்க குட்டி ஓடி தாயை நெருங்கும் சமயத்தில், பின்னால் இருந்த சிங்க குட்டி தாயின் மீது பாய்ந்து அதனை மிரட்ட முயற்சிக்கிறது.
இதனால், திடுக்கிட்ட பெண் சிங்கம் உடனடியாக எழுந்து சுற்றி பார்க்கிறது. பின்னர், தனது குட்டி என்று தெரிந்ததும் அமைதியாகி விடுகிறது. தாய் சிங்கம் திரும்பியதும், பயத்தில் சிங்க குட்டி பதுங்குகிறது.”
இந்த வீடியோவை 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர்.
CUTENESS ALERT 😻
— Great Day Washington (@greatdaywash) October 15, 2019
Watch this lion cub sneak up on their mom pic.twitter.com/9JQqEPSM0s