98 வயதிலும் சாதனை படைத்த மூதாட்டி! வைரலாகும் வீடியோ காட்சி
98 வயதிலும் ஜிம்னாஸ்டிக் செய்து சாதனை படைத்த மூதாட்டியின் வியக்க வைக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
வயது என்பது எத்தனை என்றாலும் சாதிக்க முடியும் என்று நம் மனதில் நினைத்தால் அதை நடத்தி காட்டலாம்.
அந்த வகையில் சோஷியல் மீடியாக்களில் சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில் வயதான பெண் ஒருவர் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காண்போரை சிலிர்க்க வைத்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த சிலர் இந்த மூதாட்டிக்கு 60 அல்லது 70 வயது இருக்கலாம் என்று பலரும் யூகிக்கும் நிலையில் மூதாட்டியான ஜோஹன்னா குவாஸின் வயதோ 98 என்பது உண்மையில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இந்த மூதாட்டி தனது 10 வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக்ஸில் இருக்கிறார். ஜெர்மனியில் பிறந்த ஜோஹன்னா குவாஸ் கடந்த 2012ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான ஜிம்னாஸ்ட் என்ற பட்டத்திற்கான கின்னஸ் உலக சாதனையை பெற்றார்.
அப்போது இவருக்கு 86 வயது. 12 ஆண்டுகள் கழிந்தும் இவர் முன்பை போலவே படு ஃபிட்டாக, அதே சமயம் ஜிம்னாஸ்டிக் செய்வதற்கேற்ப உறுதியாக செயல்பட்டு வருவது உண்மையில் நம்மை வியக்க வைக்கிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் சாதனை படைக்க வயதின் எல்லை முக்கியம் இல்லை என தங்கள் பதிவை குறிப்பிட்டுள்ளனர்.
98 years old.
— anand mahindra (@anandmahindra) May 13, 2024
That’s right—Johanna Quaas is 98.
Never say die.
She’s my #MondayMotivation pic.twitter.com/Ll8b9kFQSb