Tamizha Tamizha: தாயின் காலுக்கு மகள் கொண்டு வந்த அன்பு பரிசு! கண்ணீரில் மூழ்கடித்த பாசம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் வறுமையில் பிள்ளைகளை படிக்க வைத்த பெற்றோர்கள் மற்றும் படித்து உயர்ந்த பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் வறுமையில் பிள்ளைகளை படிக்க வைத்த பெற்றோர்கள் மற்றும் படித்து உயர்ந்த பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் பெற்றோர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு படிக்க வைத்த பிள்ளைகள் நல்ல நிலைக்கு சென்றுள்ளதுடன், பெற்றோர்களை நன்றாக பார்த்துக் கொள்ளவும் செய்கின்றனர்.
பெண் ஒருவர் தனது தாய்க்கு ஆவைசயாக வாங்கி வந்த கொலுசை போட்டுவிட்டு, அரங்கத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |