ஏமாற்றிய காதலிக்கு சுவரொட்டியின் மூலம் பலமான பதிலடிக் கொடுத்த இளைஞர்!
இலங்கையில் காதலி ஏமாற்றிய விடயத்தை சுவரொட்டின் மூலம் உலகிற்கு காட்டிய இளைஞரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு ஏன் ஓப்புக் கொள்ளவில்லை?
இலங்கையில் நல்லூர் பகுதியில் வசித்து வரும் அரச உத்தியோகஸ்தர் ஒருவருடைய மகள், கடந்த 7 வருடங்களுக்கு மேல் அப்பகுதியில் வசிக்கும் ஏழை வீட்டு இளைஞரை காதலித்து வந்துள்ளது.
இவர்களின் காதலை குறித்து பெண்ணின் வீட்டில் பல முறை எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்களின் காதல் முடியவில்லை.
இதனை தொடர்ந்து பெண் வீட்டில் பல முறைகள் பெண்ணிற்கு வலியுறுத்தியதால் வீட்டில் பார்த்த பணக்கார மாப்பிளைக்கு குறித்த பெண் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்த இளைஞருக்கு தெரியவந்துள்ளதால் அந்த பெண்ணிற்கு பல இலட்சம் ரூபாய் செலவு செய்யதாகவும் தெரிவித்துள்ளார்.
வேறொரு திருமணம்
இந்நிலையில் பெண் வீட்டார் அவர்கள் பார்த்த மாப்பிளைக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர் மீது பெண்ணை ஏமாற்றி தான் காதலித்தாக பெண் வீட்டார் குற்றஞ்சுமத்தியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து இளைஞர் பெண் மற்றும் அவர்களின் வீட்டார் செய்த விடயத்தை சுவரொட்டியாக வடிவமைத்து நல்லுார் பகுதி முழுவதும் ஒட்டியுள்ளார்.
இதனை பார்த்து பலரும் குறித்த வீட்டில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.