இரத்த ஓட்டத்தை சீராக்கும்.. சுவையான சுவரொட்டி வறுவல் செய்வது எப்படி?
இறைச்சியில் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி என பல வகைகள் உள்ளன. இவற்றில் ஆட்டு இறைச்சி மிகவும் சத்துள்ள ஒன்றாக உள்ளது.
அதிலும் நமது ஊர்களில் கிடைக்கும் வெள்ளை ஆட்டு இறைச்சியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. தற்போது, இந்த ஆட்டு இறைச்சியில் உள்ள பாகங்களை சாப்பிடுவதை பலர் தவிர்த்து விட்டனர் என்றே கூறலாம்.
ஏனென்றால் இவற்றில் கிடைக்கும் பாகங்களை விதவிதமாகவும், நல்ல டேஸ்ட்டியிலும் சமைக்க பலர் கற்றுக் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஆட்டு இறைச்சியில் கிடைக்கும் முக்கிய பாகமாக உள்ள மண்ணீரல் என்கிற சுவரொட்டியில் எப்படி டேஸ்டியான வறுவல் தயார் செய்யலாம் என்று இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி சீரகம் தூள் – 1 தேக்கரண்டி மிளகு – 1 தேக்கரண்டி, மல்லி தூள் – 1தேக்கரண்டி உப்பு – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி நறுக்கிய வெங்காயம் – 1 சுவரொட்டி – 3 பச்சை மிளகாய் – 5 இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்
முதலில் சுவரொட்டி வறுவல் தயார் செய்ய முதலில் அவற்றை நன்கு வேக வைக்க வேண்டும். எனவே உங்களிடம் குக்கர் இருந்தால் அவற்றில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து நன்கு வேக வைக்கவும்.
அல்லது சாதாரண அடுப்பில் கூட நன்கு வேக வைத்து கீழே இறக்கவும் இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பென்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்.
இவற்றோடு சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். பின்னர் மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதைத்தொடர்ந்து மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும். அதன் பின்னர் மிதமான சூட்டில் சுவரொட்டியை சேர்த்து வதக்கவும்
. கொஞ்சம் கரு நிறம் தோன்றும் வரை வதக்கி கீழே இறக்கவும். இப்போது நீங்கள் விரும்பிய சுவரொட்டி வறுவல் தயாராக இருக்கும். இந்த அருமையான சைடிஷை பரிமாறி உண்ணவும்.