கொளுத்தி போட்ட பிக்பாஸ்.. சூடுபிடிக்கும் நாமினேஷன் Free pass டாஸ்க்- தீபக்கிற்கு கிடைக்குமா?
“அறிவு இருக்கா டி..” என பிக்பாஸ் வீட்டில் தர்ஷிகாவை அன்ஷிதா பேசியது இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக்பாஸ் 8
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இதுவரையில், நடந்த எவிக்ஷன்களில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, சிவக்குமார் ஆகிய 7 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது. இதற்கு போட்டியாளர்களுடன் இணைந்து பிக்பாஸ் ஊழியர்களும் தான் என தகவல்கள் கூறுகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 20 போட்டியாளர்களை வைத்து நடத்தப்பட்டாலும் அவர்களை கண்காணிக்கு நூற்றுக்கணக்கான கேமராக்கள் உள்ளே வைக்கப்பட்டுள்ளன.
அவர்களை நிர்வகிக்க தனி டீம், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், அசோசியேட் இயக்குனர்கள் என 500க்கும் மேற்பட்டோர் உள்ளே வேலைப்பார்க்கின்றனர்.
அறிவு இருக்கா டி?
இந்த நிலையில், இன்றைய தினம் பேய் மற்றும் ஏஞ்சல்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், ஏஞ்சல்களை கோபப்படுத்தி அவர்களிடம் இருக்கும் நட்சத்திரங்களை பேய்கள் வாங்கி சேகரித்தால் அந்த நபருக்கு நாமினேஷன் ப்ரி பாஸ் கொடுக்கப்படும் என பிக்பாஸ் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து பேய்கள் கடுப்பாக்க ஆரம்பித்து விட்டார்கள். அதில், தர்ஷிகா- அன்ஷிதா இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அன்ஷிதா, “ உனக்கு அறிவு இருக்கா டி?..” என கோபமாக பேசியுள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |