இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு தேர்தல் பிரசாரம் செய்யும் தயாரிப்பாளர்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..
பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் தயாரிப்பாளர் ரவீந்தர் எண்ணற்ற வார்த்தைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
மறுமண சர்ச்சை சிக்கிய பிரபலங்கள்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர் தயாரிப்பாளர் ரவீந்தர்.
இவர்களின் திருமணம் நயன்தாராவின் திருமணத்தை விட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து நடிகை மகாலட்சுமி - ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால் பல சர்ச்சையான கருத்துக்கள் மக்கள் சார்பாக எழுந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிறைய பேட்டிகள், கலந்து கொண்டார்கள். தொடர்ந்து வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விடயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் தேர்தல் பிரசாரம்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவீந்தர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பங்கேற்க போவதாக தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்த தகவலை தொடர்ந்து அந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சரியான பொருளாளராக இருப்பேன் இன்ஸ்டாவில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அதில், “ உங்க குடும்பத்தில் ஒருவரான நினைத்து எனக்கு வாக்களியுங்கள், கடவுளிடம் என்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்க மாட்டேன். ஏனென்றால் எனது பதவிக்கு நா மரியாதையளிக்கிறேன். என்னை வெற்றி பெற செய்யுங்கள் " என குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவிற்கு இணையவாசிகளும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன், இது பிரசாரம் செய்யும் இடம் இல்லை எனவும் கலாய்த்து வருகிறார்கள்.