என் இரண்டு மனைவியும் தேர்தலில் வெற்றி... 3வது மனைவியுடன் சேர்ந்து கொண்டாடிய கணவர்!
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நன்பூர் என்னும் பகுதியில் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர் சம்ரத் மவுரியா(40). இவர் ஒரே நேரத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்திது.
அந்த கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் நடக்கும் முன்பு சுமார் 15 ஆண்டுகளாக 3 பெண்களுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தி வந்திருந்தார்.
3 மனைவி 6 குழந்தைகள்
இதன் மூலம், இவருக்கு மொத்தம் 6 குழந்தைகளும் உள்ளனர். வறுமை காரணமாக திருமணம் செய்யாமல் இருந்து வந்த சம்ரத், கடந்த ஏப்ரல் மாதம், மூன்று பேரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
அந்த கிராமத்திலேயே இந்த திருமணம் தான் சுமார் 3 நாட்கள் மிகவும் விமரிசையாக திருவிழா போல கொண்டாடப்பட்டிருந்தது. இது சம்மந்தமான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தன.
இந்நிலையில், இவரின் மூன்று மனைவிகளில் இரண்டு பேர், சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், மூன்றாவது மனைவியையும் தேர்தலில் நிறுத்த சம்ரத் முயன்றதாகவும், ஆனால் அவர் கல்வித் துறையில் Peon ஆக பணிபுரிந்து வருவதால், வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், அந்த முடிவை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
முன்னாள் கிராம தலைவராக இருந்த சம்ரத் மவுரியா, இரண்டு மனைவிகள் தேர்தலில் வெற்றி பெற்றதால், ஆனந்தத்தில் கொண்டாடி வருகிறார்.
மகிழ்ச்சி
இதுகுறித்து சம்ரத் தெரிவிக்கையில், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இங்குள்ள மக்கள் அனைவரும் என்னையும் எனது மனைவியையும் நேசிக்கிறார்கள்.
மேலும், நான் எனது மூன்று மனைவிகளுடன், ஒரு சிறிய அறையில் மிகவும் இணக்கத்துடன் வாழ்ந்து வருகிறேன். அதே போல, அனைத்து நிகழ்ச்சிகளிலும் நாங்கள் ஒன்றாக தான் கலந்து வருகிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.