சேலையில் வசீகரிக்கும் அழகுடன்... ரவீந்தர் மகாலட்சுமியின் தலை பொங்கல் புகைப்படங்கள்
சமூகவலைத்தளத்தையே பரபரப்பாக்கிய டிரெண்டிங் ஜோடி ரவீந்தர் மகாலட்சுமியின் தலை பொங்கல் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மகாலட்சுமி.
தொடர்ந்து சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன, கொடூர வில்லியாக, அமைதியான மகளாக இவரது நடிப்பை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான மகாலட்சுமி கடந்தாண்டு பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார்.
இருவரையும் உருவக்கேலி செய்து கமெண்டுகள் வந்தாலும், பணத்துக்காக மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என கூறினாலும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் இந்த ஜோடியினர்.
அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் மகாலட்சுமி, கணவருடன் சேர்ந்து கொண்டாடிய தலை பொங்கல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.